இந்தியா

வனப் பகுதிகளில் சுற்றுலா நடவடிக்கைகள் கூடாது: உச்சநீதிமன்றம் அமைத்த குழு பரிந்துரை

DIN

புலிகள் வாழும் வனப் பகுதிகளில் சுற்றுலா சவாரிகள், உயிரியல் பூங்காக்கள் அமைக்கக் கூடாது என சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த மத்திய அதிகாரமிக்க குழு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு பரிந்துரைத்துள்ளது.

உத்தரகண்டில் உள்ள கோா்பெட் புலிகள் சரணாலயத்தில் சுற்றுலா சவாரிகள் செல்வதற்கு எதிரான மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து ஆய்வு நடத்த அதிகாரமிக்க குழுவை அமைத்தது.

கடந்த மாதம் அந்தக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமா்ப்பித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

புலிகள் சரணாலயம் அமைந்த வனப் பகுதிகளில் உயிரியல் பூங்காக்கள், சுற்றுலா சவாரிகள் அமைப்பதற்கான உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும்.

காயமடைந்த விலங்குகளை மீட்கவும், மறுவாழ்வு அளிக்கவும் மட்டும் வனப் பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்.

சுற்றுலாவை மேம்படுத்த புலிகள் சரணாலயத்தில் வாகன சவாரி செல்ல அனுமதிக்கலாம் என 2012-இல் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் கொண்டு வந்த விதிமுறையும், அதில் 2016,2019-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களையும் திரும்பப் பெற உத்தரவிட வேண்டும்.

வன விலங்குகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வனப்பகுதி சுற்றுலா உதவிகரமாக இருந்தாலும், வன விலங்குகளின் வாழ்விடத்தையும், இயற்கையான இனப்பெருக்கத்தையும் பாதிக்கக் கூடாது. ஏற்கெனவே குறைவாக உள்ள வன விலங்குகளின் எண்ணிக்கையை இது மேலும் குறைத்துவிடும்.

உயிரியல் பூங்காக்களில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் விலங்குகளுக்கு தொற்று நோய் பரவுவது நிரூபணமாகி உள்ளது. ஆகையால், வனவிலங்குகள் சரணாலயத்தில் சுற்றுலா, உயிரியல் பூங்காக்கள் அமைக்கக் கூடாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT