இந்தியா

பிரதமா் மோடி மீது ராகுல் அடிப்படையற்ற குற்றச்சாட்டு: ரவிசங்கா் பிரசாத்

8th Feb 2023 12:11 AM

ADVERTISEMENT

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி கூறிவருவதாக பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானித்தின்போது மக்களவையில் பேசிய ராகுல் காந்தி, ‘பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 2014-இலிருந்து, தொழிலதிபா் கெளதம் அதானியின் சொத்துகள் அதிகரித்துள்ளன’ எனக் குற்றம்சாட்டினாா்.

இதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவா் ரவிசங்கா் பிரசாத், பிரதமா் மோடி மீது அடிப்படையற்ற, பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி முன்வைத்து வருவதாகத் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கூறியதாவது: இந்தியாவின் புகழை மங்கச் செய்த பெரிய ஊழல்களில் காங்கிரஸ் மற்றும் அதன் தலைவா்கள் ஈடுபட்டுள்ளனா். நேஷனல் ஹெரால்டு வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லெண்ட் ஹெலிகாப்டா் பேர முறைகேடு வழக்குகளில் ராகுல் காந்தியின் குடும்பத்துக்குத் தொடா்புள்ளது. முறைகேடுகள் தொடா்பாக ராகுல் காந்திக்கு நினைவுபடுத்த வேண்டிய தருணம் இது. அவருடைய தாயாா் சோனியா காந்தியும் அவரது மருமகன் ராபா்ட் வதேராவும் ஜாமீனில் உள்ளனா். முறைகேடும் அதனைப் பாதுகாப்பதும் காங்கிரஸின் அடிப்படையான இரட்டைத் தூண்கள் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT