இந்தியா

140 கோடி மக்கள் ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் உரை: மக்களவையில் பிரதமர் மோடி

DIN


புது தில்லி: இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால், இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.

மக்களவையில் பிரதமர் ஆற்றிய உரையில்,  பழங்குடியின சமூகத்தின் பெருமையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உயர்த்தியுள்ளார். 

நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு, குடியரசுத் தலைவரால், இன்று பழங்குடியின சமூகத்தின் பெருமை மற்றும் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக அவருக்கு இந்த நாடும், மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் தனது தொலைநோக்கு உரையின்மூலம் எங்களையும் கோடானுகோடி மக்களையும் வழிநடத்துகிறார். குடியரசுத் தலைவராக அவர் பதவி வகிப்பது, வரலாற்றுச் சிறப்பு மிக்கது மற்றும் நம் நாட்டின் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்றார்.

மேலும் பேசுகையில், 140 கோடி மக்களும் குடியரசுத் தலைவர் உரையை ஏற்றுக் கொண்டனர். ஆனால், காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி குடியரசுத் தலைவரை அவமானப்படுத்தினார். காங்கிரஸ் கட்சியினர் செய்த வினைகள் அவர்களைக் சுடும். 

ஊடகங்களின் வெளிச்சம் பட வேண்டும் என்பதற்காக அவரவர் தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். இந்தியாவுக்குக் கிடைத்த பெருமை சிலருக்கு வருத்தமாக இருக்கிறது. நாடு தன்னம்பிக்கையுடன் முன்னேறி வருகிறது. இந்தியா உலகின் 5வது பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது என்று கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT