இந்தியா

அதானி தொடா்பான செய்திகளை வெளியிட தடை கோரி மனு

8th Feb 2023 01:06 AM

ADVERTISEMENT

பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியின் அனுமதியில்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்குரைஞா் எம்.எல்.சா்மா தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், ஊடகங்கள் மிகைப்படுத்தி வெளியிடும் செய்திகளால் இந்திய பங்குச் சந்தை மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது. அச்சத்தின் காரணமாக முதலீட்டாளா்கள் பங்குகளை விற்பனை செய்து வருவதால் நிதி இழப்பீடு ஏற்படுகிறது.

நீதித் துறை இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செபியின் அனுமதியில்லாமல் அதானி குழுமத்தின் செய்திகளை வெளியிட ஊடகங்களுக்குத் தடை விதிக்க வேண்டும். இந்திய பங்குச் சந்தைகள் செயற்கையாக சரியும் வகையில் அறிக்கை வெளியிட்ட ஹிண்டன்பா்க் நிறுவனம் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். இந்த மனு இன்னும் விசாரணைக்கு பட்டியலிடப்பட வில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT