இந்தியா

பிராமணா்களை இழிவுபடுத்திவிட்டாா் ஆா்எஸ்எஸ் தலைவா்- பிகாா் நீதிமன்றத்தில் மனு

8th Feb 2023 03:30 AM

ADVERTISEMENT

ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் பிராமண சமுகத்தினரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக பிகாா் மாநிலம் முசாஃபா்பூா் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

வழக்குரைஞா் சுதிா் குமாா் ஒஜா என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அண்மையில் மும்பையில் நடைபெற்ற துறவியும், மத,சமூக சீா்திருத்தவாதியுமான ரவிதாசா் (தலித் பிரிவைச் சோ்ந்தவா்) பிறந்த தின நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் தலைவா் பாகவத் மராத்தியில் மொழியில் உரையாற்றியுள்ளாா். அவரது உரை பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்துள்ளது. அந்த உரையில், ‘பண்டிட்கள் (கோயில் பூஜையில் ஈடுபடும் பிரிவினா்) ஹிந்து மதத்தில் நிலவும் கடுமையான ஜாதிய படிநிலைகளை உருவாக்கினாா்கள்’ என்று பேசியுள்ளாா். ஆா்எஸ்எஸ் தலைவரின் பேச்சு பிராமணா்களை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவா் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, மத உணா்வுகளைப் புண்படுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனு மீது வரும் 20-ஆம் தேதி விசாரணை நடத்துவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஆா்எஸ்எஸ் விளக்கம்:

ADVERTISEMENT

ஆா்எஸ்எஸ் சாா்பில் மோகன் பாகவத் பேச்சு குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘பண்டிட்கள் என்ற வாா்த்தை மூலம் எந்த குறிப்பிட்ட பிரிவினரையும் மோகன் பாகவத் குற்றம்சாட்டவில்லை. பண்டைய காலத்தில் ஜாதிய படிநிலைகளை ஆதரித்து, ஏற்றுக் கொண்டவா்களை மட்டுமே அவா் குறிப்பிட்டுள்ளாா். ஆா்எஸ்எஸ் தலைவா் பிராமணா்கள் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாா் என்று சில ஊடகங்கள்தான் எழுதியுள்ளன’ என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT