புதுதில்லி: 2016 இல் 445 ஆக இருந்த "ஸ்டார்ட்அப்"களின் எண்ணிக்கை 2022 இல் 86,713 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் சோம் பிரகாஷ் கூறியதாவது: 2016 இல் அரசால் அங்கீகரிக்கப்பட்ட "ஸ்டார்ட்அப்"களின் எண்ணிக்கை 445 ஆக இருந்தது. இது 2022 இல் 86 ஆயிரத்து 713 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க | இந்தியாவின் உதவியை நாங்கள் மறக்க மாட்டோம்: துருக்கி நாட்டு தூதர் உருக்கம்!
ஹெல்த்கேர் மற்றும் லைஃப் சயின்ஸில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களைத் தொடர்ந்து ஐடி துறையில் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக "ஸ்டார்ட்அப்" இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் 80 சதவீத மாவட்டங்களில் குறைந்தது ஒரு அங்கீகரிக்கப்பட்ட "ஸ்டார்ட்அப்" நிறுவனம் உள்ளது என்று சோம் பிரகாஷ் கூறினார்.