இந்தியா

லக்னௌ விரைவில் லக்ஷ்மன் நகரி என மாற்றப்படும்: உ.பி. துணை முதல்வர்

8th Feb 2023 06:17 PM

ADVERTISEMENT

 

லக்னௌ விரைவில்லக்ஷ்மன் நகரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று உத்தரப் பிரதேச துணை முதல்வர் பிரதேஷ் பதாக் தெரிவித்தார். 

பதோஹி மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு துணை முதல்வர் பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சி பணிகளைப் பற்றி ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தினார். பின்னர், சூரியவா பகுதியில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் சிலையையும் அவர் திறந்துவைத்தார். 

இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவின் பெயரை "லக்கன்பூர் அல்லது லக்ஷ்மன் நகரி" என்று மாற்ற வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பாஜக எம்பி சங்கம் லால் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தினார்.

ADVERTISEMENT

படிக்க: துருக்கி நிலநடுக்கம்: உயிரிழப்பு 11,000-ஐ கடந்தது!

முன்னதாக திரேதா யுகத்தில் லக்கன்பூர் என்றும் லக்ஷ்மன்பூர் என்றும் இந்த நகரத்திற்குப் பெயரிடப்பட்டதாகக் கூறிய பாஜக எம்.பி., நவாப் ஆசாப்-உத்-தௌலா லக்னௌ என்று பெயர் மாற்றம் செய்ததாகக் கூறினார்.

திரேதா யுகத்தில் லக்னௌவை ராமர் தனது சகோதரரும் அயோத்தியின் மன்னருமான லட்சுமணனுக்கு பரிசாக அளித்ததாக குப்தா கூறினார்.

இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாக்க உத்தரப் பிரதேச தலைநகரின் பெயரை மறுபெயரிடுமாறு குப்தா அமித்ஷாவிடம் கோரிக்கை விடுத்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT