புது தில்லி: நாட்டில் ஒரு நாள் கரோனா பாதிப்பு 100-க்கும் கீழ் குறைந்துள்ளது.
கரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.
நாட்டில் புதிதாக 96 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,83,639 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் இறந்தோரின் எண்ணிக்கை 5,30,746 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,785ஆக குறைந்துள்ளது.
படிக்க: கோத்தபய ராஜபட்சவிடம் இலங்கை காவல்துறை விசாரணை
தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,41,51,108 ஆகப் பதிவாகியுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220,60 கோடி டோஸ் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.