இந்தியா

விரைவில் பயன்பாட்டில்.. க்யூஆர் கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரம்

8th Feb 2023 05:59 PM

ADVERTISEMENT


மக்களிடையே சில்லறை புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், மக்கள் அதிகம் கூடும் பொதுவிடங்களில் க்யூஆர்  கோடு அடிப்படையில் சில்லறை வழங்கும் இயந்திரங்கள் வைக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் முதற்கட்டமாக 12 நகரங்களி, சில்லறை நாணயங்கள் மட்டுமே வழங்கும் இயந்திரங்கள், ரயில் நிலையங்கள், பொழுதுபோக்குக் கூடங்கள், சந்தைப் பகுதிகளில் வைக்கப்படவிருக்கின்றன.

வங்கிக் கணக்கிலிருந்து பணத்தைப் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பெற்றுக் கொண்டு அதற்கு ஈடான சில்லறை நாணயங்களை வழங்கும் வகையில் இந்த இயந்திரம் வடிவமைக்கப்படும்.

இதில், வடிக்கையாளர்களுக்கு தங்களுக்கு எந்த மதிப்புள்ள நாணயம், எத்தனை வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

சோதனை முறையில் செயல்படுத்தப்படவிருக்கும் இந்த திட்டம் வெற்றிபெற்றால், அது விரிவுபடுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

Tags : RBI coin UPI
ADVERTISEMENT
ADVERTISEMENT