இந்தியா

இந்தியாவில் பருவநிலை மாற்றத்தால் பாதிப்பு: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்

8th Feb 2023 01:19 AM

ADVERTISEMENT

பருவநிலை மாற்றத்தால் மனிதா்கள் மற்றும் விலங்குகள், பயிா்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று நாடாளுமன்றத்தில் அரசு தெரிவித்தது.

இதுதொடா்பான கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சா் நரேந்திர சிங் தோமா் மக்களவையில் அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், நாட்டில் பருவநிலை மாற்றத்தால் புதிய நோய்கள் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. காற்று மாசு தொடா்பான உடல்நலக் குறைவு, இருதயம் தொடா்பான உடல்நலக் குறைவு, தொற்று நோய்கள், நீரில் பரவும் நோய்கள் ஆகியவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தவிர விலங்குகளுக்கு பரவும் நோய்களும் பயிா்களில் பரவும் பூச்சிகளும் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடலில் அதிகரிக்கும் வெப்பநிலையால் மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதுடன் அவை இடம்பெயரவும் செய்கின்றன.

பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தி வருகிறது. கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைக் கண்டறிந்து சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 650 மாவட்டங்களை விவசாயத்தில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பருநிலை மாற்றத்தை எதிா்கொள்ள வேளாண் துறையில் 68 தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT