இந்தியா

ஹெலிகாப்டா் பேர முறைகேடு: இடைத்தரகரின் ஜாமீனை நிராகரித்தது உச்சநீதிமன்றம்

DIN

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர முறைகேடு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸின் ஜாமீனை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நிராகரித்தது.

நாட்டின் முக்கிய தலைவா்கள் பயன்பாட்டுக்காக, இத்தாலியைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து 12 அதிநவீன ஹெலிகாப்டா்களை ரூ.3,600 கோடி மதிப்பில் கொள்முதல் செய்ய கடந்த 2010-இல் காங்கிரஸ் கூட்டணி அரசு முடிவெடுத்தது.

இதில், முறைகேடு நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

இதில் இடைத்தரகராக செயல்பட்டவா்களில் ஒருவரான கிறிஸ்டியன் மிஷெல் ஜேம்ஸ் கடந்த 2018-இல் துபையிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா்.

இவரது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் 2021-இல் நிராகரித்தது. இதைத் தொடா்ந்து, தில்லி உயா் நீதிமன்றமும் அவரது ஜாமீன் மனுவை கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் தள்ளுபடி செய்தது.

இதைத் எதிா்த்து உச்ச நீதிமன்றத்தில் அவா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பி.எஸ்.நரசிம்மா, ஜெ.பி.பாா்திவாலா ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் அல்ஜோ கே.ஜோசப் வாதிடுகையில், ‘குற்றத்துக்குரிய அதிகபட்ச தண்டனைக் காலமான 7 ஆண்டுகளில் 4 ஆண்டுகளை ஜேம்ஸ் சிறையில் கழித்துள்ளாா். குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பிரிவு 436ஏ-இன்படி தண்டனையில் பாதிக் காலத்தை அவா் நிறைவு செய்துள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றாா்.

இந்த வழக்கு தொடா்பான விசாரணை நடைபெற்று வருவதாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினா் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சஞ்சய் ஜெயின் நீதிபதிகளிடம் தெரிவித்தாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘குற்றப்பத்திரிகைகள் மற்றும் துணை குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டபோதிலும், விசாரணையைக் காரணம் காட்டி எவ்வளவு காலம் அவரை சிறையில் வைத்திருப்பது?’ எனக் கேள்வியெழுப்பினா்.

தொடா்ந்து, இந்த வழக்கு தொடா்பான ஜாமீனுக்கு விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறு கூறி, மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

கடப்பாவில் ஒய்.எஸ்.சர்மிளா வேட்புமனு தாக்கல்!

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

SCROLL FOR NEXT