இந்தியா

2 கி.மீ. ரயில் தண்டவாளம் மாயம்! அதிகாரிகள் அதிர்ச்சி

8th Feb 2023 11:06 AM

ADVERTISEMENT

பிகார் மாநிலத்தில் 2 கிலோ மீட்டர் தொலைவிலான ரயில் தண்டவாளம் திருடப்பட்ட சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

பிகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தின் கீழ் பந்தவூல் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்திலிருந்து லோஹாத் என்ற சக்கரை ஆலைக்கு ரயில்வே பாதை ஒன்று உள்ளது.

இந்த சக்கரை ஆலை கடந்த சில ஆண்டுகளாக இயங்காமல் இருந்ததால், ரயில் போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், சுமார் இரண்டு கி.மீ. தொலைவிலான இந்த பாதை கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போனதால், கிராம மக்களின் புகாரை தொடர்ந்து ரயில்வே நிர்வாகம் விசாரணையை தொடர்ந்தது.

ADVERTISEMENT

இதையும் படிக்க | வீடு, வாகனக் கடன் வட்டி உயர்கிறது! ரெப்போ வட்டி விகிதம் 0.25% அதிகரிப்பு!!

இந்த விசாரணையில் மர்ம நபர்களால் ரயில் தண்டவாளம் திருடப்பட்டு கோடிக்கணக்கில் பழைய இரும்பு வியாபாரிகளிடம் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த திருட்டில் தொடர்புடைய இரண்டு ரயில்வே காவலர்களை இடைநீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகின்றது.

பொதுவாக ரயில்களில்தான் அவ்வப்போது திருட்டு சம்பவம் அரங்கேறும், ஆனால் ரயில் தண்டவாளமே திருடு போன சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT