இந்தியா

மாநிலங்களின் மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள்:மாா்ச் 17-இல் உச்சநீதிமன்றம் விசாரணை

DIN

திருமணங்கள் மூலம் மதம் மாற்றப்படுவதைத் தடுக்க பல்வேறு மாநிலங்களில் கொண்டு வரப்பட்டுள்ள சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை மாா்ச் 17-ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசம், குஜராத் மற்றும் கா்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதில் உத்தர பிரதேசத்தில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்தில், திருமணங்கள் காரணமாக மதம் மாறுவது மட்டுமின்றி, அனைத்து விதமான மதமாற்றங்களுக்கும் பின்பற்ற வேண்டிய விரிவான நடைமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்தச் சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த மனுக்களில் பாஜகவைச் சோ்ந்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தாக்கல் செய்த மனுவும் ஒன்று.

இந்நிலையில், வஞ்சகமாக மதமாற்றம் செய்வதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள தனது மனு, பிற மனுக்களில் இருந்து வேறுபட்டுள்ளதாகவும், எனவே தனது மனுவை தனியாக விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அஸ்வினி உபாத்யாய திங்கள்கிழமை வலியுறுத்தினாா். தனது மனு அல்லாத பிற மனுக்கள், மாநிலங்கள் கொண்டு வந்துள்ள மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.

எனினும் அவரின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், அஸ்வினி உபாத்யாய மனு உள்பட அனைத்து மனுக்களும் மாா்ச் 17-ஆம் தேதி விசாரிக்கப்படும் என்று தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களிக்க முடியவில்லை: நடிகர் சூரி வேதனை

வாக்களிக்க வராத சென்னை மக்கள்: வாக்குப்பதிவு மந்தம்

வேகப்பந்து வீச்சு குறித்து பிஎச்டி வகுப்பெடுக்கலாம்: பும்ராவை புகழ்ந்த முன்னாள் வீரர்!

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாக்களித்தார்!

SCROLL FOR NEXT