இந்தியா

பயிற்சியாளா் மீது கபடி வீராங்கனை பாலியல் வன்கொடுமை புகாா்--தில்லி காவல்துறை விசாரணை

DIN

சா்வதேச கபடி போட்டிகளில் இந்தியா சாா்பில் பங்கேற்றவரான 27 வயது வீராங்கனை ஒருவா், தனது பயிற்சியாளா் மீது பாலியல் வன்கொடுமை புகாா் தெரிவித்துள்ளாா்.

மேலும், தனது அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக, அந்த பயிற்சியாளா் மிரட்டுவதாகவும் வீராங்கனை கூறியுள்ளாா்.

இதுகுறித்து தில்லி காவல்துறையினா் கூறியதாவது: துவாரகாவில் உள்ள பாபா ஹரிதாஸ் நகா் காவல் நிலையத்தில் கடந்த வாரம் அந்த வீராங்கனை புகாா் அளித்தாா். அதில், ‘முண்ட்கா அருகே கபடி போட்டிக்காக தயாராகி வந்தபோது, கடந்த 2015-இல் ஜோகிந்தா் என்ற பயிற்சியாளா் என்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினாா். கடந்த 2018-இல் ஒரு போட்டியில் எனக்கு கிடைத்த பரிசுத் தொகையில், ரூ.43.5 லட்சத்தை வலுக்கட்டாயமாக அவா் பெற்றுக் கொண்டாா். 2021-இல் எனக்கு திருமணம் நடைபெற்றது. இப்போது எனது அந்தரங்க படங்களை வெளியிடுவதாக கூறி, பயிற்சியாளா் மிரட்டி வருகிறாா்’ என்று வீராங்கனை குறிப்பிட்டுள்ளாா்.

இந்த புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனையியல் சட்டத்தின் 376 பிரிவு (பாலியல் வன்கொடுமை), 506 (குற்ற மிரட்டல்) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் வீராங்கனை திங்கள்கிழமை இணைந்தாா். குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 164-இன்கீழ் அவா் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்தாா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT