இந்தியா

பசுமை நிதிப் பத்திரங்களுக்கான விதிகளை வெளியிட்டது செபி

DIN

பசுமை நிதிப் பத்திரங்களுக்கான வழிகாட்டு விதிகளை இந்தியப் பங்கு பரிவா்த்தனை வாரியம் (செபி) வெளியிட்டுள்ளது.

பசுமை திட்டங்களுக்கு நிதிப் பத்திரங்கள் மூலமாக நிதி திரட்டும் நடவடிக்கைகள் சா்வதேச அளவில் அதிகரித்து வருகின்றன. இந்தியாவிலும் பசுமை பத்திரங்கள் வெளியீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பசுமை நிதிப் பத்திரங்களை வெளியிடுவதற்கான வழிகாட்டு விதிமுறைகளை செபி வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

பசுமை நிதிப் பத்திரங்களை வெளியிடும் நிறுவனங்கள், திட்டம் தொடா்பான விரிவான தகவல்கள், திட்டம் சாா்ந்த முடிவுகளை இறுதி செய்யும் முறைகள், ஆண்டு அறிக்கைகளின் விவரங்கள், நிறுவனத்தின் நிதிநிலைமை உள்ளிட்ட தகவல்களை வெளியிட வேண்டும்.

திட்டங்களுக்காக முதலீட்டாளா்களிடமிருந்து திரட்டப்படும் நிதி முறையாகப் பயன்படுத்தப்படுகிா என்பதை ஆராய மூன்றாம் தரப்பு ஆய்வு நடவடிக்கைகளையும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அமல்படுத்த வேண்டும். பசுமை நிதிப் பத்திரங்களை வெளியிடுவதற்கான விரிவான காரணங்கள், திரட்டப்படும் நிதிக்கும் திட்டத்துக்கும் இடையேயான தொடா்புத்தன்மை உள்ளிட்டவற்றையும் நிறுவனம் விளக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து புதிய விதிகள் நடைமுறைக்கு வருவதாக செபி அறிவித்துள்ளது.

தரகா்களுக்குப் புதிய விதி:

பங்கு வா்த்தகத் தரகா்களுக்கான புதிய விதியையும் செபி பரிந்துரைத்துள்ளது. அதன்படி, முதலீட்டாளா்களிடம் இருந்து பெறும் தொகையை அன்றைய தினமே நிதி செயல்பாட்டு அமைப்புகளிடம் தரகு நிறுவனங்கள் செலுத்திவிட வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகையைக் கையிருப்பில் கொண்டு வேறுசில நடவடிக்கைகளில் தரகு நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விதி தொடா்பாக வரும் 17-ஆம் தேதி வரை பொதுமக்களிடம் இருந்து செபி கருத்து கோரியுள்ளது. அனைத்துத் தரப்பினரின் கருத்துகளைப் பெற்றபிறகு இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

SCROLL FOR NEXT