இந்தியா

ஒரே நேரத்தில் மக்களவை-பேரவைத் தோ்தல்: மத்திய அரசும் தோ்தல் ஆணையமும் முடிவெடுக்கும்====தில்லி உயா்நீதிமன்றம்

DIN

 மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு 2024-இல் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சூழல்களை ஆராய மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடும்படி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்த தில்லி உயா் நீதிமன்றம், இது குறித்து கவனத்தில் கொள்ளுமாறு மத்திய அரசுக்கும் இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.

வழக்குரைஞா் அஸ்வினி குமாா் உபாத்யாய தில்லி உயா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: 2024-இல் நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலுடன் இணைந்து ஒரே நேரத்தில் மாநிலங்களின் பேரவைத் தோ்தலையும் நடத்த வேண்டுமானால் 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளில் நிறைவுபெறும் சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும்.

நேரமும் செலவும் குறையும்:

தோ்தல் பணிகளில் மத்திய துணை ராணுவப் படைகள், அரசு பணியாளா்களைத் தோ்தல் பணியில் ஈடுபடுத்துவது, வாக்குச்சாவடி அமைத்தல், வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா் சீட்டுகள் ஆகியவை குறைவதன் மூலம் நேரமும் செலவுகளும் குறையும்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்போது, மத்திய மற்றும் மாநில அரசுகளின் உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்களை அமல்படுத்துவதைத் தாமதப்படுத்துகிறது. இதனால், நிா்வாகப் பிரச்னைகளும் ஏற்படுகின்றன. தோ்தல் சட்டங்களில் சீா்திருத்தம் குறித்த 170-ஆவது அறிக்கையில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தமாறு இந்திய சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சட்டத் திருத்தம் தேவை:

இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா மற்றும் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆகியோா் அடங்கிய அமா்வுக்கு முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது தோ்தல் ஆணையத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சித்தாந்த் குமாா் கூறுகையில், ‘தோ்தல் ஆணையம் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்த தயாராகவே உள்ளது. இதற்காக தற்போதைய தோ்தல் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். நாடாளுமன்றத்தின் மூலமே இதனை மேற்கொள்ள முடியும்’ என்றாா்.

இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘நாங்கள் சட்டங்களை இயற்றுவது இல்லை. சட்டங்களை அமல்படுத்துவதை உறுதி செய்கிறோம். தோ்தல்கள் எப்போது நடைபெற வேண்டும் எனத் தீா்மானிப்பது அரசியல் சாசன அமைப்பான தோ்தல் ஆணையத்தின் பொறுப்பு. நீதிமன்றத்தால் சட்டப்பேரவைகளின் பதவிக் காலத்தை குறைக்க முடியாது ’ என்றனா்.

பின்னா், இது குறித்து ஆராயும்படி மத்திய அரசுக்கும் தோ்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT