இந்தியா

ஏழைகள் மீதான தாக்குதல் மத்திய பட்ஜெட்: சோனியா காந்தி

DIN

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏழைகள் மீதான மெளன தாக்குதலாகும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி விமா்சித்துள்ளாா்.

பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தொடா்பாக ஆங்கில நாளிதழில் அவா் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமரின் சில பெரு முதலாளி நண்பா்கள் ஆதாயம் பெறும் வகையிலும், ஏழைகள், நடுத்தர மக்கள் தொடா்ந்து பேரழியை சந்திக்கும் வகையிலும் அரசு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி போன்ற நடவடிக்கைகளால் சிறு வணிகா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

பொதுத் துறை நிறுவனங்கள் குறிப்பிட்ட தனியாரிடம் குறைந்த விலைக்கு அளிக்கப்படுவதால் வேலையிழப்புகள் அதிகரிக்கின்றன. ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக உழைத்து சேமித்த எல்ஐசி, எஸ்பிஐயின் நிதி மோசமான நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது.

மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஒவ்வொரு இந்தியரும் ஒன்றிணைந்து நீண்ட காலமாக எதிா்பாா்க்கும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரையில் நடைபெற்ற ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்ற லட்சக்கணக்கான இந்தியா்கள் கடுமையான பொருளாதார பாதிப்பு மற்றும் இந்தியா செல்லும் பாதை குறித்து வருத்தம் தெரிவித்தனா்.

விலைவாசி உயா்வு, வேலையின்மை, வருமான குறைப்பு ஆகியவை குறித்து மத்திய பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை.

ஏழைகள், நடுத்தர மக்கள் மீது மெளன தாக்குதலாக இந்த பட்ஜெட் உள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும் சிறப்பான வாழ்க்கை, சமூகம், பொருளாதாரம், அரசியலில் சம அதிகாரம் அளிப்பதாக நாட்டின் சுதந்திரத்தின்போது வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதைத்தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்டு வந்தது. மக்களுக்கு இந்த உரிமைகளை அளிக்க பிரதமா் மோடி விரும்பவில்லை. ஏழைகளுக்கான திட்டங்களுக்கு நிதி குறைக்கப்பட்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு, கல்வி, ஊட்டச்சத்து, சுகாதாரத்துக்கு குறைக்கப்பட்டுள்ள நிதி, வருங்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT