இந்தியா

சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் இந்தியா!

7th Feb 2023 04:18 PM

ADVERTISEMENT

சிரியாவில் மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில், மருத்துவ உபகரணங்களை அனுப்பவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

துருக்கி மற்றும் சிரியாவில் திங்கள்கிழமை அதிகாலை ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி துருக்கியில் 5,000, சிரியாவில் 2000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 

இந்த நிலநடுக்கத்தால் இரு நாடுகளின் எல்லைப் பகுதி நகரங்களில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

இதையும் படிக்க | துருக்கி நிலநடுக்கம்: இந்தியாவில் இருந்து 100 மீட்புப் படை வீரர்கள் விரைவு!

இந்நிலையில், சிரியாவுக்கு இந்திய விமானப் படையின் சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானம் மூலம் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அத்தியாவசிய மருத்துகளை மத்திய அரசு இன்று அனுப்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக துருக்கிக்கு இன்று காலை இரண்டு விமானப் படை விமானங்கள் மூலம் 101 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மற்றும் நிவாரணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பி இருந்தது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT