பெருவின் கமானா மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்சி 8 பேர் பலியானதாகவும், 5 பேர் மாயமாகியுள்ளதாகவும் தேசிய அவசரக்கால செயல்பாட்டு மையம் உறுதிப்படுத்தியது.
மரியானோ நிக்கோலஸ் வால்கார்செல் மாவட்டத்தில் அமைந்துள்ள பம்பைலிமா, வெனாடோ டி ஓரோ, இன்ஃபியர்னிலோ, சான் மார்டின், மிஸ்கி மற்றும் செகோச்சா உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்தது.
மிஸ்கி மற்றும் சான் மார்டின் ஆகிய இரு சுரங்கங்களிலும், தொழிலாளர்கள் பணிபுரிந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டது.
படிக்க: பிரபல ரஜினி பட தயாரிப்பாளர் காலமானார்!
நிலச்சரிவு ஏற்பட்ட விடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட இடங்களில் உதவிகளை விமானம் மூலம் அனுப்புமாறு உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.