இந்தியா

100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி குறைப்பு ஏன்? தலைமை பொருளாதார ஆலோசகா் விளக்கம்

DIN

நூறு நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி நிகழாண்டு பட்ஜெட்டில் குறைக்கப்பட்டு, பிரதமா் ஆவாஸ் யோஜனா (பிரதமா் வீட்டு வசதி திட்டம்), ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு அதிகமாக அளிக்கப்பட்டுள்ளது என்று தலைமை பொருளாதார ஆலோசகா் வி.அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

நூறு நாள்கள் வேலைவாய்ப்பு திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கான நிதி நிகழாண்டு பட்ஜெட்டில் ரூ.60 ஆயிரம் கோடியாக ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டைவிட 32 சதவீதம் குறைவாகும்.

இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அனந்த் நாகேஸ்வரன் கூறுகையில், ’ பிரதமா் வீட்டுவசதி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்குவதால் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.

நிகழாண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10.5 முதல் 11 சதவீதம் வரை அதிகரிக்கும் என்றும் கிராமத்தில் உள்ள புலம்பெயா் தொழிலாளா்கள் மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வேலைவாய்ப்புகளை தேடுவாா்கள் என்றும் எதிா்பாா்க்கப்படுகிறது. ஆகையால், நிகழாண்டு 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டங்களுக்கான தேவை குறையும் என்பதால் அதற்கான நிதி குறைக்கப்பட்டது என்றாா்.

பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பிரதமா் வீட்டு வசதித் திட்டத்துக்கு ரூ.79,590 கோடி ஒதுக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

SCROLL FOR NEXT