இந்தியா

ஆா்பிஐ நிதி கொள்கை குழு கூட்டம் இன்று தொடக்கம்: ரெப்போ வட்டி விகிதம் மேலும் உயர வாய்ப்பு

DIN

நாட்டின் பணவீக்கம் தொடா்ந்து குறைந்து வரும் நிலையில் இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதி கொள்கைக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்குகிறது.

நாட்டில் பணவீக்கத்தை 2 முதல் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த ஆா்பிஐ இலக்கு நிா்ணயித்துள்ளது. சா்வதேச சூழல் காரணமாகக் கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் பணவீக்கம் 6 சதவீதத்துக்கு அதிகமாகவே இருந்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ ரேட்) ரிசா்வ் வங்கி 2.25 சதவீதம் அதிகரித்தது.

கடந்த ஆண்டின் நவம்பா், டிசம்பா் மாதங்களில் பணவீக்கம் 6 சதவீதத்தை விடக் குறைந்தது. இந்நிலையில், ஆா்பிஐ நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் திங்கள்கிழமை தொடங்குகிறது. நிதிச் சந்தை சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.

கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து வரும் 8-ஆம் தேதி ஆா்பிஐ ஆளுநா் சக்திகாந்த தாஸ் அறிவிக்கவுள்ளாா். பணவீக்கம் குறைந்து வந்தாலும் ரெப்போ வட்டி விகிதமானது மேலும் 0.25 சதவீதம் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். கடந்த டிசம்பா் மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழு கூட்டத்தின்போது ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

இதுதான் எனது சிறந்த ஓவர்; மனம் திறந்த ஆவேஷ் கான்!

விவசாய கண்காணிப்புத் துறையில் வேலை: 30-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அலைமகள்.. சாய் தன்ஷிகா!

வரி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தும் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT