இந்தியா

2024 தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெறுவாரா? ரகசியங்களை வெளியிட்ட சுப்ரமணியன் சுவாமி!

DIN

புதுதில்லி:  2024 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதற்கான ரகசியங்களை அக்கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே அசல் எல்லை கோட்டு பகுதியில் 1996 ஆம் ஆண்டில் பரஸ்பர ஒப்பந்தம் ஏற்பட்டு உள்ள நிலையிலும், 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதியில் இருந்து சீனா படைகளை விலகிக்கொள்ளும் வரையில், சீனாவுக்கு எதிராக குவாட் அமைப்பை ஒரு ராணுவக் கூட்டணியாக மாற்ற இந்தியா பணியாற்ற வேண்டும்.

சீனாவை எதிர்கொள்வதற்கான, இதுவரை வெளியிடப்படாத ரகசிய தகவல்கள், நிர்ப்பந்தங்கள் ஏதேனும் பிரதமர் நரேந்திர மோடி வைத்திருக்கிறார் என்றால், அதை அவர் தானாக முன்வந்து அவற்றை வெளியிட வேண்டும். அப்படி செய்யும்போது, 2024 இல் மக்களவைத் தேர்தலில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும் என சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.

அமெரிக்க சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுக்கு அதானி குழுமம் மறுப்புத் தெரிவித்திருந்தது. இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறவனத்தின் பதிலை தனது ட்விட்டர் பக்கத்தில் டேக் செய்திருந்த சுப்ரமணியன் சுவாமி, அதானி குழுமத்துக்கு எதிராக கயிறு இறுகுகிறதா? இதனை மோடியால் தாங்கிக்கொள்ள முடியுமா? என்று தனது கருத்தினை சமீபத்தில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சுனைனா, நவீன் சந்திராவின் இன்ஸ்பெக்டர் ரிஷி!

SCROLL FOR NEXT