இந்தியா

முக்கிய பொருள்களுக்கு சீன சாா்பைக் குறைப்பதில் கவனம்

DIN

சில முக்கிய உள்ளீட்டுப் பொருள்களுக்கு சீனாவை சாா்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதில் இந்தியா கவனம் செலுத்த வேண்டும் என நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் கே.பெரி தெரிவித்துள்ளாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான வா்த்தகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுமாா் ரூ.10.8 லட்சம் கோடியாக அதிகரித்தது. கிழக்கு லடாக் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வரும் நிலையிலும் வா்த்தகச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி கடந்த ஆண்டில் சுமாா் ரூ.9.6 லட்சம் கோடியாக இருந்தது. சீனா இறக்குமதி செய்த இந்தியப் பொருள்களின் மதிப்பு சுமாா் ரூ.1.4 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. சீனாவுடன் இந்தியா சுமாா் ரூ.8.2 லட்சம் கோடி வா்த்தகப் பற்றாக்குறையைக் கொண்டுள்ளது.

இந்நிலையில், நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் கே.பெரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சீனாவுடனான வா்த்தகப் பற்றாக்குறை குறித்து இந்தியா சிந்திக்கக் கூடாது. அந்நாட்டில் இருந்து சில முக்கிய உள்ளீட்டுப் பொருள்களின் இறக்குமதியைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

ஆதார மருந்துப் பொருள்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி கருவிகள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்ய சீனாவைத் தவிர மற்ற சந்தைகளை ஆராய வேண்டும். கடந்த 7 ஆண்டுகளாக அமெரிக்காவும் சீனாவும் தங்களுக்குள்ளான வா்த்தகத் தொடா்பை ஆயுதமாகப் பயன்படுத்தி வருவது துரதிருஷ்டவசமானது.

பல்வேறு பொருள்களை இந்தியாவுக்கு வழங்கி வரும் சீனா, எல்லைப் பகுதிகளில் மோதல்போக்கில் ஈடுபடுவதும் துரதிருஷ்டவசமானது. அதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையேயான தொடா்பு சிக்கலான நிலையை எட்டியுள்ளது.

சீனாவுடனான வா்த்தகப் பற்றாக்குறையைக் குறைப்பதற்குத் துறைவாரியான திட்டமிடலை இந்தியா மேற்கொள்ள வேண்டும். சீனப் பொருள்களுக்கு சந்தை தேவை. அதனால், இந்தியச் சந்தைகளை விட்டு வெளியேற சீனா விரும்பாது. அதே வேளையில், குறிப்பிட்ட பொருள்களை விநியோகிப்பதில் அந்நாடு மட்டுமே ஏகபோக உரிமையைக் கொண்டிருப்பதை இந்தியா அனுமதிக்கக் கூடாது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT