இந்தியா

ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு: 150 சாலைகள் மூடல்!

DIN

ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்பட சுமார் 150 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாநில அவசரக்கால செயல்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. 

வடமாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகின்றது. பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பூஜ்ய டிகிரி வெப்பநிலை நிலவியதால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், ஹிமாசலில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதையடுத்து, சாலைகளில் காட்சித்திறன் குறைந்துள்ளது. இதனால், முக்கிய மூன்று தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட லாஹவுல் மற்றும் ஸ்பிதியில் அதிகபட்சமாக 130 சாலைகள், சம்பாவில் ஒன்பது, குலுவில் ஐந்து, காங்க்ரா மற்றும் சிம்லாவில் தலா இரண்டு மற்றும் 200 டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் 8 நீர் வழங்கல் திட்டங்கள் தடைபட்டுள்ளதாக அவசரக்கால மையம் தெரிவித்துள்ளது.

கோக்சரில் 3.4 செமீ பனியும், குகும்சேரி மற்றும் கீலாங்கில் முறையே 1.7 செமீ மற்றும் 1 செமீ பனிப்பொழிவும் பதிவாகியுள்ளன.

வானிலை அறிக்கையின்படி, 

சம்பாவில் உள்ள பார்மூரில் 12.3 மிமீ மழை பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, சலூனியில் 8.4 மிமீ மழையும், பஞ்சார் 3 மிமீ, பாண்டோ 1.5 மிமீ, பாலம்பூர் 1 மிமீ மற்றும் பூந்தர் மற்றும் சிம்லா தலா 0.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

குகும்சேரி மற்றும் கீலாங் மைனஸ் 3.9 டிகிரி மற்றும் மைனஸ் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அதே நேரத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களான நர்கண்டா, டல்ஹவுசி குஃப்ரி, சிம்லா மற்றும் மணாலி ஆகியவை குறைந்தபட்சமாக 0.3 டிகிரி, 2.9 டிகிரி, 3.1 டிகிரி, 4.4 டிகிரி செல்சியஸ் மற்றும் 5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT