இந்தியா

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

6th Feb 2023 11:09 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் 5 பேர் இன்று பதவியேற்றுக்கொண்டனர். 

இதன்படி பங்கஜ் மித்தல், சஞ்சய் கரோல், அசானுதீன் அமானுல்லா, மனோஜ் மிஸ்ரா, பி.வி. சஞ்சய் குமாா் ஆகியோர் பதவியேற்றனர். புதிய நீதிபதிகள் 5 பேருக்கும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதையும் படிக்க- அதானி குழும விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

புதிய நீதிபதிகள் பதவியேற்கும் நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 32-ஆக உயரும். உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள 34 நீதிபதி பணியிடங்களில் தற்போது 27 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்ற கொலீஜியம் கடந்த ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி அனுப்பிய பரிந்துரைக்கு மத்திய அரசு சனிக்கிழமை ஒப்புதல் அளித்ததன் மூலமாக, உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக 5 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேசமயம் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலீஜியம் நடைமுறை மீது மத்திய அரசுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT