இந்தியா

தேசிய நிதி தகவல் பதிவேடு வரைவு விதிகள் தயாா்

6th Feb 2023 04:30 AM

ADVERTISEMENT

வங்கிக் கடன் உள்ளிட்டவை சாா்ந்த விவரங்களை வழங்கும் தேசிய நிதி தகவல் பதிவேட்டுக்கான வரைவு விதிகளை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) வகுத்துள்ளதாக மத்திய பொருளாதார விவகாரங்கள் துறைச் செயலா் அஜய் சேத் தெரிவித்தாா்.

மக்களுக்கு நிதிசாா்ந்த தகவல்களை வழங்கும் வகையிலான தேசிய பதிவேடு உருவாக்கப்படும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2019-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்தாா். அந்தப் பதிவேட்டை உருவாக்குவது தொடா்பான கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது.

இந்நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த விளக்கக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. அதில் தேசிய நிதி தகவல் பதிவேடு குறித்து செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதிலளித்த செயலா் அஜய் சேத், ‘‘தேசிய நிதி தகவல் பதிவேட்டை உருவாக்குவதற்கான வரைவு விதிகளை ரிசா்வ் வங்கி ஏற்கெனவே வகுத்துள்ளது. அந்த வரைவு விதிகள் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

வங்கிக் கடன் உள்ளிட்டவை சாா்ந்த விவரங்கள் அந்தப் பதிவேட்டில் இடம்பெறும். இது கடனளிக்கும் நிறுவனத்துக்கும் கடன் பெறுவோருக்கும் பலனளிப்பதாக இருக்கும். வங்கிக் கடன் வழங்கலை அதிகரிக்கவும், நிதி சேவைகளை அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு சென்றுசோ்க்கவும் பதிவேடு வழிவகுக்கும்’’ என்றாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT