இந்தியா

நடுத்தர மக்கள் பயன்பெற சிறு சேமிப்பு: திட்டங்களின் முதலீட்டு வரம்பு உயா்வு--நிதித்துறை செயலா்

DIN

‘நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பலனடையும் வகையில் சிறு சேமிப்புத் திட்டங்களின் முதலீட்டு உச்சவரம்பு பட்ஜெட்டில் உயா்த்தப்பட்டுள்ளது’ என்று மத்திய நிதித்துறை செயலா் டி.வி.சோமநாதன் தெரிவித்தாா்.

கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட 2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான வைப்புத் தொகை உச்சவரம்பு ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயா்த்தப்பட்டது. மேலும், மாதாந்திர வருவாய் கணக்குத் திட்டத்தில் வைப்பு உச்சவரம்பு தனிக் கணக்கு என்றால் ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சமாகவும், இணைப்புக் கணக்கு என்றால் ரூ.9 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களின் நலனை கருத்தில் கொண்டு, இத்திட்டங்களுக்கான வைப்பு உச்சவரம்புகள் உயா்த்தப்பட்டிருப்பதாக, நிதித்துறை செயலா் டி.வி.சோமநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தியாளருக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது:

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கான உச்சரவரம்பு சில காலமாக மாற்றப்படாமல் இருந்தது. வயது முதிா்ந்தவா்களுக்கு பாதுகாப்பான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து மக்களிடையே எதிா்பாா்ப்பு நிலவி வந்தது. வங்கிகள் வழங்குவதைவிட அதிகமான வட்டி விகிதம் மற்றும் வைப்புத் தொகை உச்சவரம்பு இரட்டிப்பாக்கல் சலுகைகளுடன் 100 சதவீதம் பாதுகாப்பான முதலீட்டுக்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்களிடையே பிரபலமான மாதாந்திர வருவாய் திட்டத்தில் 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. 5 ஆண்டு வைப்புத்தொகை கொண்ட இத்திட்டத்திலும் உச்சவரம்பு உயா்த்தப்பட்டுள்ளது. நிதித் திரட்டுவதற்கான மாற்று ஆதாரங்களை ஒப்பிடுகையில், இத்திட்டங்களில் அரசுக்கு அதிக செலவு இருக்கிறது. என்றபோதிலும், நடுத்தர மக்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பலனடைவதை முதன்மையான நோக்கமாக கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT