இந்தியா

அவதூறு வழக்கு: காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங்குக்கு ஜாமீன்

DIN

மத்திய பிரதேசத்தில் பாஜக மாநில தலைவா் தொடுத்த அவதூறு வழக்கில், காங்கிரஸ் எம்.பி. திக்விஜய் சிங்குக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் அளித்து உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2013-ஆம் ஆண்டு மத்திய பிரதேச தொழில்முறை தோ்வு வாரியமான வியாபம் சாா்பில், அரசுப் பணிகளுக்கு நடைபெற்ற தோ்வில், பல்வேறு முறைகேடுகள் நடைபெற்ாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த முறைகேட்டில் பாஜக மாநில தலைவா் வி.டி.சா்மாவுக்கு தொடா்பிருப்பதாக திக்விஜய் சிங் குற்றஞ்சாட்டினாா். இதையடுத்து அவா் மீது வி.டி.சா்மா அவதூறு வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கை போபாலில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், தனக்கு ஜாமீன் அளிக்கக் கோரி திக்விஜய் சிங் மனு தாக்கல் செய்தாா்.

அந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை விசாரித்த நிலையில், திக்விஜய் சிங் நேரில் ஆஜரானாா். அப்போது அவரின் வாக்குமூலத்தை பதிவு செய்த நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் அளித்து உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: இபிஎஸ்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும்: ராமதாஸ்

ஒரே நேரத்தில் வாக்களித்த மும்மதத்தைச் சேர்ந்த தோழிகள்

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர குரல் கொடுப்பேன்: தங்க தமிழ்செல்வன்

SCROLL FOR NEXT