இந்தியா

பெண் தொழிலாளர்களுக்கு பருவநிலை மாற்றம் தந்துள்ள கூடுதல் சவால் என்ன தெரியுமா? : ஹிலாரி கிளிண்டன்

DIN

பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் வெப்பநிலை உயர்வு முறைசாரா தொழிலாளர்களாக வேலை பார்க்கும் பெண்களுக்கு கூடுதலான சவாலாக அமைந்துள்ளதாக அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சா் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

பருவநிலை மாற்றத்தை குறைக்க உலக அளவில் பருவநிலை மாற்ற நிதி உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். குஜராத்துக்கு 2 நாள் பயணமாக வருகை தந்து மகிளா சேவா சங்கம் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அந்த நிகழ்ச்சியில் மகிளா சேவா சங்க உறுப்பினர்களிடம் அவர் பேசியதாவது: மக்கள் மீது அக்கறை கொண்டுள்ள சிலர் ஒரு குழுவாக ஒன்றிணைந்து முதல் முறையாக உலக அளவிலான பருவநிலை மாற்ற நிதியை உருவாக்க முன்வந்துள்ளனர். நீங்கள் பல தடைகளை தாண்டி வந்துள்ளீர்கள். பல தடைகளினாலும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், இன்று கூடுதலாக ஒரு சவாலையும் நீங்கள் சந்தித்து வருகிறீர்கள். அதுதான் வெப்பம். பருவநிலை மாற்றத்தால் தொடர்ந்து பூமியின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது.

நீங்கள் கட்டுமானத் தொழில், குப்பைகளை மறுசுழற்சி செய்யும் தொழில், பிளாஸ்டிக் சேகரிக்கும் வேலை,  தெருக்களில் காய்கறி விற்கும் தொழில் அல்லது விவசாயம் என எந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் நீங்கள் நாள்  முழுக்க அதிகப்படியான வெப்பத்தில் நிற்க வேண்டிய சூழல் உருவாகும். இதுதான் உங்களுக்கு பருவநிலை மாற்றம் கொடுத்துள்ள அடுத்த மிகப் பெரிய சவால். இந்த பிரச்னைக்கு தீர்வுகாண மகிளா சேவா சங்கம் உங்களுக்கு உதவு முயற்சி செய்யும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT