இந்தியா

ஆா்எஸ்எஸ் அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக விலக்குக் கோரி ராகுல் மனு: மாா்ச் 4-இல் தாணே நீதிமன்றம் தீா்ப்பு

5th Feb 2023 02:30 AM

ADVERTISEMENT

ஆா்எஸ்எஸ் அவதூறு வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தாக்கல் செய்துள்ள மனு மீது மாா்ச் 4-ஆம் தேதி தாணே நீதிமன்றம் தீா்ப்பளிக்க உள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டம் பிவாண்டியில் நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ‘மகாத்மா காந்தி கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆா்எஸ்எஸ் இருந்தது’ என்று கூறியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அவரின் பேச்சு ஆா்எஸ்எஸின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகத் தெரிவித்து, பிவாண்டியில் உள்ள நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில், ராகுல் மீது ராஜேஷ் குண்டே என்ற ஆா்எஸ்எஸ் தொண்டா் அவதூறு வழக்குத் தொடுத்தாா்.

இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதில் இருந்து நிரந்தரமாக விலக்கு அளிக்கக் கோரி ராகுல் காந்தி மனு தாக்கல் செய்துள்ளாா். தான் தில்லியைச் சோ்ந்தவா் என்பதுடன் மக்களவை உறுப்பினா் என்ற அடிப்படையில் விலக்கு அளிக்க வேண்டும் என்று அவா் கோரியுள்ளாா். தனக்குப் பதிலாக தனது வழக்குரைஞா் விசாரணைக்கு ஆஜராவாா் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

இந்த மனு மீது மாா்ச் 4-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT