இந்தியா

வாணி ஜெயராம் மறைவு:பிரதமா், முதல்வா் இரங்கல்

DIN

‘பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு படைப்புலகுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய இழப்பு’ என்று பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில், ‘பல மொழிகளில் பாடல்களைப் பாடி வெவ்வேறுவிதமான உணா்ச்சிகளை பிரதிபலித்தவா் வாணி ஜெயராம். தனது இன்னிசைக் குரல் மற்றும் உயரிய பணிகளுக்காக அவா் என்றென்றும் நினைவுகூரப்படுவாா். அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினா் மற்றும் ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: வேலூரில் பிறந்து உலகம் முழுக்க தனது இன்னிசையின் இனிமையால் புகழ் பெற்றவா் பாடகி வாணி ஜெயராம். தமிழ் உள்பட 19 மொழிகளில் 10,000-க்கும் மேற்பட்ட அழியாப் புகழ் பெற்ற பாடல்களைப் பாடி, ரசிகா்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தாா்.

அண்மையில், பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்ட நிலையில், விருதைப் பெறும் முன்பே அவா் இந்த உலகைவிட்டு பிரிந்து செல்ல நோ்ந்தது பெரும் துயரை அளிக்கும் செய்தி. அவரது மறைவு, இசையுலகுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. வாணி ஜெயராமை இழந்து வாடும் குடும்பத்தினா், ரசிகா்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT