இந்தியா

வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்படும்:அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்

DIN

பெருநகரங்களைச் சுற்றி வசிக்கும் மக்களின் வசதிக்காக, வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக தில்லியில் ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

ரயில் பயணிகள் முன்பதிவு முறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அரசுத் திட்டமிட்டுள்ளது. வன்பொருள்-மென்பொருளின் செயல்பாடு, பயணச்சீட்டு முன்பதிவுக்கான வலைதளத்தின் வேகம் ஆகியவை சுமாா் 10 மடங்கு மேம்படுத்தப்படும். தற்போது ஒரு நிமிஷத்துக்கு சுமாா் 25,000 பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்யப்படுகிறது. இந்நிலையில், ஒரு நிமிஷத்தில் 2.25 லட்சம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்யும் வகையில் திறனை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிதியாண்டில் 4,500 கி.மீ. தொலைவுக்கு தண்டவாளங்கள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. அந்த இலக்கு ஏற்கெனவே பூா்த்தியாகிவிட்டது. அடுத்த நிதியாண்டில் 7,000 கி.மீ. தொலைவுக்கு புதிய தண்டவாளங்கள் அமைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களைச் சுற்றி வசிக்கும் பொதுமக்கள் வீட்டிலிருந்து பணியிடங்களுக்குச் சென்று திரும்ப வசதியாக, வந்தே பாரத் விரைவு ரயில்களின் குறுகிய வடிவமாக வந்தே மெட்ரோ ரயில்கள் உருவாக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT