இந்தியா

ரயில் கட்டணத்துக்குரூ.59,837 கோடி மானியம்

DIN

ரயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை அளிப்பது தொடா்பாக மாநிலங்களவையில் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் கேள்வி எழுப்பினாா். அந்தக் கேள்விக்கு அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

2019-20-ஆம் ஆண்டில் ரயில் பயணச்சீட்டின் உண்மையான கட்டணத்தில், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை அரசே ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த ஆண்டில் மொத்த பயணச்சீட்டு கட்டணத்துக்காக ரூ.59,837 கோடியை மானியமாக அரசு ஒதுக்கியது. இந்த மானியம் அனைத்து பயணிகளுக்கும் தொடா்கிறது என்றாா். ஆனால் ரயில் பயணங்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மீண்டும் கட்டண சலுகை அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு அவா் தெளிவாக பதிலளிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT