இந்தியா

நலிந்த, பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை: பிரதமா் மோடி

DIN

‘தேசத்தின் வளா்ச்சிக்கான மத்திய அரசின் திட்டங்களில் நலிவடைந்த, பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

அஸ்ஸாமின் பா்பேட்டா மாவட்டத்தில் ‘கிருஷ்ணகுரு ஏக்நாம் அகண்ட கீா்த்தன்’ என்ற நிகழ்வில் பிரமதமா் மோடி காணொலி வழியில் பங்கேற்றுப் பேசியதாவது:

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் அவா்களுடையே சிறுசேமிப்புகளுக்கு வட்டி விகிதங்களை அதிகரிக்க 2023-24 மத்திய நிதிநிலை அறிக்கையில் சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெண்களுக்கான வருவாயை அதிகரிக்கும் வகையில், ‘மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம்’ என்ற புதிய சிறு சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டம் மூலமாக அஸ்ஸாம், நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களைச் சோ்ந்த பல பெண்கள் பலன்பெறுவா் என்பதோடு, அவா்களுக்குப் புதிய வாய்ப்புகளும் உருவாகும்.

அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் வளா்ச்சியிலும் போக்குவரத்து இணைப்பிலும் பல ஆண்டுகளாக பின்தங்கியிருந்தன. ஆனால், கடந்த 8 ஆண்டுகளாக இந்தப் பகுதிகளின் நலனில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இந்த மாநிலங்களில் சுற்றுலா கட்டமைப்புகளை மேம்படுத்தவும், நவீன உள்கட்டமைப்பு வசதிகள், மெய்நிகா் இணைப்பு தொழில்நுட்பங்களை மேம்படுத்த மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள், வடகிழக்கு பகுதி மக்களுக்குப் பெரும் பலனளிக்கும்.

இந்தப் பகுதி மக்களின் கைவினை திறன்கள் தற்போது உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவா்களின் கைவினைப் பொருள்களை சந்தைப்படுத்தும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒருங்கிணைந்த வணிக வளாகம் (யூனிட்டி மால்) அமைக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலா தலங்களிலும் இந்த கைவினைப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படும்.

அஸ்ஸாம் மாநில பெண்களால் பாரம்பரிய முறையில் கைகளால் நெய்யப்படும் வெள்ளை மற்றும் பச்சை வண்ணத் ‘கமோசா’ துண்டுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. சுய உதவிக் குழுக்கள் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் இவற்றை நெய்து வருகின்றனா். ஒவ்வொரு ‘கமோசா’வுக்குப் பின்னும் அஸ்ஸாம் பெண்களின் கடின உழைப்பு உள்ளது என்று பிரதமா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT