இந்தியா

பிரதமர் வரும் 6-ம் தேதி கர்நாடகம் பயணம்

4th Feb 2023 07:23 PM

ADVERTISEMENT

பிரதமர் மோடி பிப்ரவரி 6ஆம் தேதி கர்நாடகத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

பின்னர் காலை சுமார் 11:30 மணியளவில், பெங்களூருவில் இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்வை அவர் தொடங்கி வைக்கிறார். அதன்பின், பிற்பகல் 3:30 மணியளவில், துமகுருவில் உள்ள எச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

இதையும் படிக்க- டெல்டா மாவட்டங்களில் பயிர்ச்சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சர்கள் குழு அனுப்பி வைப்பு: முதல்வர்

மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். பிப்ரவரி 8ஆம் தேதி வரை நடைபெறும் இந்திய எரிசக்தி வாரம் 2023 நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து 30க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : PM Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT