இந்தியா

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயம்: புதுச்சேரி அரசு அறிவிப்பு

4th Feb 2023 03:31 PM

ADVERTISEMENT


புதுச்சேரியில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவித்து, அதற்கான சிறப்பு முகாம்களையும் நடத்தி வருகிறது. அரசு திட்டங்களை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிக்க | 1083 காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

இந்நிலையில், தமிழ்நாட்டை தொடர்ந்து புதுச்சேரியிலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. 

ADVERTISEMENT

மின் இணைப்புடன் ஆதார் மற்றும் அரசு துறைகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி பின்னர் அறிவிக்கப்பட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT