இந்தியா

உச்சநீதிமன்ற அமா்வில் இந்திய-சிங்கப்பூா் தலைமை நீதிபதிகள்!

4th Feb 2023 03:00 AM

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையின் ஒரே அமா்வில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூடுடன் இணைந்து சிங்கப்பூா் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் பங்கேற்றாா்.

உச்சநீதிமன்றம் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி நிறுவப்பட்டது. அதன் 73-ஆவது ஆண்டு விழா சனிக்கிழமை (பிப். 4) உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. அந்நிகழ்ச்சியில் சிங்கப்பூா் தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் தலைமை விருந்தினராகக் கலந்து கொள்கிறாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணையில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமா்வில் சுந்தரேஷ் மேனனும் கலந்துகொண்டாா். வழக்கு விசாரணை நடைமுறைகளை அவா் பாா்வையிட்டாா். அவா் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரின் தலைமை நீதிபதியாக உள்ளாா்.

சனிக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் ‘மாறிவரும் உலகில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் சுந்தரேஷ் மேனன் உரையாற்றவுள்ளாா். தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மற்ற நீதிபதிகள், உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், மூத்த வழக்குரைஞா்கள், பாா் கவுன்சில் உறுப்பினா்கள், உச்சநீதிமன்ற அலுவலகப் பணியாளா்கள் உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனா்.

ADVERTISEMENT

தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்ளிட்ட மற்ற நீதிபதிகளுடனும் சுந்தரேஷ் மேனன் ஆலோசனை நடத்தவுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சட்டக் கல்வி, நீதி வழங்கல் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா-சிங்கப்பூா் நீதிமன்றங்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது தொடா்பாக அவா்கள் ஆலோசிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT