இந்தியா

அதிரடியாக குறைந்தது தங்கம், வெள்ளி விலை!

4th Feb 2023 03:52 PM

ADVERTISEMENT

சென்னை: கடந்த இரண்டு நாள்களாக அதிரடியாக அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை சனிக்கிழமை(பிப்.4) சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.43,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தொடர் பண்டிகை காரணமாக தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. இதையடுத்து கடந்த மாதம் 2 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தங்கம் விலை சவரனுக்கு 44 ஆயித்தை தாண்டியது.

பிப்ரவரி 2 ஆம் தேதி ஒரே நாளில், ரூ.720 விலை உயர்ந்து ரூ.44,040 ஆக விற்பனையானது.

இதையும் படிக்க | 1083 காலி பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி!

ADVERTISEMENT

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (பிப் 3) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,802 ஆக விற்பனையானது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.520 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.46,416 ஆக விற்பனையானது.  

22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,440  ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.520 வரை குறைந்து ரூ.43,520 ஆக விற்பனையானது.

இதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.40 பைசா குறைந்து ரூ.76.40 ஆகவும், 1 கிலோ வெள்ளி ரூ.76,400 ஆகவும்
விற்பனையானது.

இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை சனிக்கிழமை(பிப்.4) சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.43,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

கிராமுக்கு ரூ.90 குறைந்து ஒரு கிராம் ரூ.5,415 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இதேபோல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.80 பைசா குறைந்து ரூ.76 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT