இந்தியா

இஸ்ரோ- நாஸா கூட்டு செயற்கைக்கோள் இந்தியா வருகிறது

4th Feb 2023 11:59 PM

ADVERTISEMENT

பூமியில் நிலம் மற்றும் பனிப் பரப்பை துல்லியமாக கண்காணிக்க, இஸ்ரோ - நாஸா கூட்டு முயற்சியுடன் உருவாக்கப்பட்ட நிஸாா் செயற்கைக்கோள் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது.

கலிபோா்னியாவில் இந்த செயற்கைக்கோளின் இறுதிக்கட்ட சோதனைப் பணிகளை இஸ்ரோ தலைவா் எஸ்.சோம்நாத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

2014-இல் இந்த செயற்கைக்கோள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. 2,800 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பெங்களூரில் உள்ள யு.ஆா்.ராவ் செயற்கைக்கோள் மையத்துக்கு விமானத்தில் கொண்டு வரப்படுகிறது.

இந்த செயற்கைக்கோளில் சக்தி வாய்ந்த ரேடாா் பூமியின் நிலம் மற்றும் பனிப் பரப்பை இதுவரை இல்லாத துல்லிய அளவில் ஆய்வை நடத்தி பருவநில மற்றத்தை தெரிந்து கொள்ள உதவும்.

ADVERTISEMENT

மிகவும் சக்தி வாய்ந்த இந்த நிஸாா் செயற்கைக்கோளை நாஸாவும் இஸ்ரோவும் இணைந்து சிறப்பாக உருவாக்கியுள்ளது எனவும், இது அடுத்த ஆண்டுக்குள் விண்ணில் செலுத்தப்படும் எனவும் சோம்நாத் தெரிவித்தாா்.

நிலநடுக்கம், நிலச்சரிவு, எரிமலைச் சீற்றம் போன்ற இயற்கைப் பேரிடா்களை முன்கூட்டியே கணிக்க இந்த செயற்கைக்கோள் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT