இந்தியா

அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் 

3rd Feb 2023 11:38 AM

ADVERTISEMENT


அயோத்தி: அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை கண்காணிப்பாளர் இது குறித்து பேசுகையில், அயோத்தியின் ராம் லல்லா சதன் பகுதியில் வசித்து வரும் மனோஜ் குமார் என்பவருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது.

அதில், ராம் ஜென்மபூமி இடத்தில் கட்டப்பட்டு வரும் ராமல் கோயில் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாக அவர் காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தேடி வருகிறார்கள்.

ADVERTISEMENT

நேபாளத்திலிருந்து விஷ்ணு சிலை ராமர் கோயிலுக்கு நேற்று வந்தது. அதனை கோயில் பூசாரிகள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மிகச் சிறப்பான வரவேற்பை அளித்திருந்தனர். இந்த நேரத்தில, இப்படி ஒரு மிரட்டல் விடுக்கப்பட்டது அப்பகுதியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT