இந்தியா

2023-ஆம் ஆண்டில் இலக்கு இதுதான்; திகார் டிஜிபி தகவல்

3rd Feb 2023 11:58 AM

ADVERTISEMENT


புது தில்லி: திகார் மத்திய சிறைச்சாலையை 2023ஆம் ஆண்டில் கைப்பேசியே இல்லாத பகுதியாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாக சிறைத் துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டி திகார் சிறையில் 23 மாற்றங்களை ஏற்படுத்துவது என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இலக்காக, ஒட்டுமொத்த சிறைச்சாலையையும் செல்லிடப்பேசி இல்லாத பகுதியாக மாற்றவும், பிரச்னைகள் பற்றி கைதிகள் தகவல் அளிக்கும் அமைப்பை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் அவர் பேசுகையில், திகார் சிறையில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து திடீர் சோதனைகள் நடத்தி ஏராளமான கைப்பேசிகளையும் தடை செய்யப்பட்ட பல்வேறு பொருள்களையும் கைப்பற்றியிருக்கிறோம்.

ஏராளமான சோதனைகள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 348 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT