இந்தியா

9 மாநிலங்களில் தேர்தல்: வாக்களிப்பவர்களை அதிகப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் புதிய முயற்சி!

DIN

இந்த ஆண்டு 9 மாநில சட்டப்பேரவை தேர்தல்களும், அடுத்த ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளதால் தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் சதவிகிதத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பல புதுமையான உத்திகளையும் தேர்தல் ஆணையம் கையிலெடுத்துள்ளது. 

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக சுபாஷ் காய் என்ற அமைப்பினருடன் இணைந்து தேர்தலில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலுக்கு ’இது நமது இந்தியா, நாம் இந்தியாவின் வாக்காளர்கள்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பாடலில் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாக்காளர்களிடம் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்தும், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் வலியுறுத்தும் விதமாக அமைந்துள்ளது. 

இந்தப் பாடல் குறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் கூறியிருப்பதாவது: வாக்களிப்பது குறித்த இந்த விழிப்புணர்வு பாடல் பிரபலங்களின் மூலம் கவனத்தைப் பெற தொடங்கிவிட்டது. பல்வேறு மொழிகளில் இந்தப் பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான ஒரு வாரத்திலேயே பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், ட்விட்டர் மற்றும் யூடியூப் என அனைத்துத் தளங்களையும் சேர்த்து 3.5 லட்சம் பார்வைகளையும், 5.6 லைக்குகளையும் கடந்துள்ளது. இந்தப் பாடலின் நோக்கம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து உணர்த்தி, வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வதாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

SCROLL FOR NEXT