இந்தியா

கேஜரிவால் இல்லம் முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம்: காரணம் என்ன தெரியுமா?

DIN

தில்லியில் அரசு நிதி பெற்று இயங்கி வரும் 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் வீட்டுக்கு முன்பு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்களும், பணியாளர்களும் ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தில்லியின் தீனதயாள் உபாத்யாயா கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகள் வழங்கப்படாத ஊதியத்தினை வழங்கக் கோரி கடந்த இரண்டு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கல்லூரி தில்லி அரசிடம் இருந்து முழுவதுமாக தங்களது நிதியினைப் பெறுகின்றது. 

இது குறித்து தில்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ராம்வீர் சிங் பிதூரி கூறியதாவது: கேஜரிவால் தலைமையிலான அரசு ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு பயிற்சிக்கு அனுப்புவது தொடர்பாக ஆளுநரிடம் சண்டையிடுகிறது. ஆனால், இந்த 12 கல்லூரிகளின் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மீது தில்லி அரசுக்கு கவலை இல்லை என்றார்.

இந்த நிலையில், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அரவிந்த் கேஜரிவால் இல்லத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT