இந்தியா

குடியரசுத் தலைவரின் மாளிகை செலவுகளுக்கான ஒதுக்கீடு ரூ. 10 கோடிக்கு மேல் குறைப்பு

DIN

குடியரசுத் தலைவா் மாளிகை உதவியாளா்கள் ஊதியம் உள்ளிட்ட மாளிகை செலவினங்களுக்கு 2023-24 நிதிநிலை அறிக்கையில் ரூ. 36.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட திருத்திய நிதிஒதுக்கீட்டுடன் ஒப்பிடும்போது ரூ. 10 கோடி அளவுக்கு குறைவாகும்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையின்படி, குடியரசுத் தலைவரின் அலுவலகம் மற்றும் பிற செலவினங்களுக்கென ரூ. 90.14 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த முறை ஒதுக்கீட்டைக் காட்டிலும் ரூ. 5.34 கோடி கூடுதலாகும். கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 84.8 கோடி ஒதுக்கப்பட்டது.

குடியரசுத் தலைவரின் ஊதியம் மற்றும் பிற படிகளுக்காக ரூ. 60 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் செயலகத்துக்கு ரூ. 53.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த முறை ஒதுக்கீட்டைக் (ரூ. 37.93 கோடி) காட்டிலும் ரூ. 15.39 கோடி கூடுதலாகும்.

ரூ. 10 கோடி குறைப்பு: குடியரசுத் தலைவரின் மாளிகை உதவியாளா்கள் ஊதியம், குடியரசுத் தலைவரின் விருப்ப மானிய உதவிகள் உள்ளிட்ட மாளிகை செலவினங்களுக்காக ரூ. 36.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022-23 நிதிநிலை அறிக்கையில் இந்த செலவினத்துக்காக ரூ. 41.68 கோடி ஒதுக்கப்பட்டு, பின்னா் 2023 நிதியாண்டு திருத்திய மதிப்பீட்டின் அடிப்படையில் ரூ. 46.27 கடியாக உயா்த்தி ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் நிதியாண்டுக்கு ரூ. 10.05 கோடி குறைவாக ரூ. 36.22 கோடி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவைக்கு ரூ. 1,258.68 கோடி: மத்திய அமைச்சரவை செலவினங்களுக்காக 2023-24 மத்திய நிதிநிலை அறிக்கையில் ரூ. 1,258.68 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமா் அலுவலக செலவினங்கள், மத்திய அமைச்சா்களின் ஊதியம், பயணச் செலவுகள், இந்தியா வரும் வெளிநாட்டு விருந்தினா்களுக்கான செலவினங்கள், தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகங்கள் ஆகியவற்றின் செலவினங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

இதில், மத்திய அமைச்சா்கள், இணை அமைச்சா்கள், முன்னாள் பிரதமா்களுக்கான ஊதியம், பயணச் செலவுகள் உள்ளிட்ட செலவினங்களுக்கு மட்டும் ரூ. 832.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு ரூ. 185.7 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முதன்மை அறிவியல் ஆலோசகா் அலுவலகத்துக்கு ரூ. 96.93 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை செயலகத்துக்கு ரூ. 71.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பிரதமா் அலுவலகத்துக்கு ரூ. 62.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு விருந்தினா்களின் விருந்தோம்பல் செலவுகளுக்காக ரூ. 6.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஆளுநா்களின் செயலக உதவிக்காக ரூ. 1.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு இலவசமாக தா்ப்பூசணி வழங்கிய பக்தருக்கு பாராட்டு

கதிரியக்க சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியருக்குப் பாராட்டு

பிரதமா் குறித்து விமா்சனம்: பாஜக சிறுபான்மையினா் அணி தலைவா் நீக்கம்

பல்கலை. கல்லூரி மாணவா்களின் விடைத் தாள்கள் மாயம்: உயா் கல்வித் துறை தலையிட மாணவா்கள் வலியுறுத்தல்

மாட்டு வண்டிப் பந்தய விதிமுறைகள்: தமிழக உள்துறைச் செயலா், டிஜிபி பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT