இந்தியா

உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.96 லட்சம் கோடி ஒதுக்கீடு

DIN

உள்நாட்டு பாதுகாப்புக்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதை தெளிவாக சுட்டிக்காட்டும் விதமாக, மத்திய நிதிநிலை அறிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.96 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் 2023-24-ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தாக்கல் செய்தாா். இதில், மத்திய அமைச்சா் அமித் ஷா தலைமையின் கீழ் செயல்படும் மத்திய உள்துறைக்கு கடந்த 2022-23 நிதிநிலை அறிக்கையில் ரூ.1,85,776.55 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.1,96,034.94 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் பெருந்தொகை அதாவது ரூ. 1,27,756.74 கோடி , மத்திய ஆயுத போலீஸ் படைகளுக்கு (சிஏபிஎஃப்) ஒதுக்கப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கு ரூ.1,19,070.36 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24 நிதியாண்டுக்கு சற்று கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

சிஏபிஎஃப்-க்கான ஒதுக்கீட்டில் அதிகபட்சமாக, உள்நாட்டு பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் மத்திய ரிசா்வ் போலீஸ் படைக்கு (சிஆா்பிஎஃப்) ரூ. 31,772.23 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை (நிகழ் நிதியாண்டுக்கு) ரூ.31,495.88 கோடி ஒதுக்கப்பட்டது.

எல்லைப் பாதுகாப்புப் படைக்கு (பிஎஸ்எஃப்) கடந்த முறை ரூ.23,557.51 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது (வரும் நிதியாண்டுக்கு) ரூ. 24,771.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நேபாளம், பூடானை ஒட்டிய இந்திய எல்லைப் பகுதிகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் சசஸ்த்ர சீமா பல் (எஸ்எஸ்பி) படைப் பிரிவுக்கு கடந்த முறை 8,019.78 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.8,329.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சீனா-இந்திய எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைக்கு (ஐடிபிபி) கடந்த நிதிநிலை அறிக்கையில் ரூ. 7,626.38 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.8.096.89 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தியா-மியான்மா் எல்லைப் பாதுகாப்பு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அரசுக்கு எதிரான கிளா்ச்சியாளா்கள் தடுப்புப் பணிகளிலும் ஈடுபடும் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்கு கடந்த முறை ரூ.6,561.33 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 7,052.46 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு காவல் பிரிவுக்கு (என்எஸ்ஜி) கடந்த முறை ரூ.1,183.80 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 1,286.54 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுப் பிரிவுக்கு (ஐபி) கடந்த 2022-23 நிதிநிலை அறிக்கையில் ரூ.3.022.02 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 3,418.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பாதுகாப்பு படைக்குழுவுக்கு (எஸ்பிஜி) கடந்த முறை ரூ.411.88 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 433.59 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தில்லி போலீஸுக்கு கடந்த முறை ரூ.11,617.59 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 11,662.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லைப் பகுதிகளில் சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட எல்லை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ. 3,545.03 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதற்கு ரூ.3,738.98 கோடி ஒதுக்கப்பட்டது.

காவலா்களுக்கான உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கடந்த முறை 2,188.38 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ. 3,636.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நவீனமயமாக்கலுக்கு ரூ.3,750 கோடி:

நாட்டில் போலீஸ் படைகளை நவீனமயமாக்குவதற்கு நிகழ் நிதியாண்டுக்கு ரூ.2,432.06 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கு ரூ. 3,750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தொடா்பான செலவினங்களுக்கு நிகழ் நிதியாண்டில் ரூ.2,024.54 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வரும் 2023-24 நிதியாண்டுக்கு ரூ. 2,780.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதுபோல, மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பான பணிகளுக்கு ரூ.1,564.65 கோடி, பெண்கள் பாதுகாப்பு திட்டங்களுக்கு ரூ. 1,100 கோடி, தடையவியல் கட்டமைப்புகளை நவீனமயமாக்கலுக்கு ரூ.700 கோடி, எல்லை சோதனைச் சாவடிகள் பராமரிப்புக்கு ரூ.350.61 கோடி, மத்திய ஆயுத காவல்படை திட்டம்-4 நவீனமயமாக்கலுக்கு ரூ.202.27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT