இந்தியா

வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை நீதிபதியாக்க எதிர்ப்பு: குடியரசுத் தலைவருக்கு மனு

DIN


சென்னை: பாஜக மகளிரணி தேசிய செயலராக இருந்த  வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்க எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்குரைஞர்கள் குடியரசுத் தலைவருக்கு மனு அளித்துள்ளனர்.

வெறுப்புணர்வை துண்டும் வகையில் வழக்குரைஞர் விக்டோரியா கௌரி பேசிய பேச்சுகள் யூடியூப் தளங்களில் இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக நிர்வாகியாக இருந்த விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் 21 மூத்த வழக்குரைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கொலீஜியம் அளித்த பரிந்துரையை திரும்பப் பெறக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியத்துக்கும் மூத்த வழக்குரைஞர்கள் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.

கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று வழக்குரைஞர் விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்றும் பரிந்துரையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் குடியரசுத் தலைவருக்மகும் என்ஜிஆர் பிரசாத், ஆர். வைகை உள்பட 21 மூத்த வழக்குரைஞர்கள் கையெழுத்திட்டு மனு அளித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம் வாபஸ்

ரூ.32 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகம்: உச்ச நீதிமன்றம் ஏற்க மறுப்பு

சாலையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

ஆவணமின்றி மரக்கட்டைகள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT