இந்தியா

மாநில பேரவைத் தேர்தலுக்குத் தயாராகும் பாஜக! வேட்பாளர்கள் அறிவிப்பு!!

DIN

மேகாலயா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பாஜகவின் மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இன்று (பிப்.2) வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.  

திரிபுராவில் பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் பிப்ரவரி 27ஆம் தேதியும் ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் மார்ச் 2ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையொட்டி பாஜக பேரவைத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. மத்திய தேர்தல் குழு ஆலோசனையைத் தொடர்ந்து, தற்போது மேகாலயா தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

மேகாலயாவின் 60 பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. இதன் மூலம் மேகாலயாவில் பாஜக தனித்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

60 தொகுதிகளையுடைய நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் மட்டுமே பாஜக போட்டியிடுகிறது. நாகாலாந்தில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிடுகிறது.

நாகாலாந்தின் மாநில பாஜக தலைவராக தெம்ஜென் இம்னா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அலோங்டாகி தொகுதியில் களமிறங்குகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT