இந்தியா

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு!

2nd Feb 2023 02:16 PM

ADVERTISEMENT


நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைக்கப்படுவதாக இன்று (பிப்.2) பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக மக்களவை, மாநிலங்களவை அவ்வபோது ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் ஏற்பட்ட அமளியால், நாளை வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

அதானி குழுமத்தின் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.  

அவை நடவடிக்கைகள் இன்று காலை தொடங்கியதும், அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT