இந்தியா

மாநிலங்களவையில் மன்மோகன் சிங்குக்கு கடைசி வரிசையில் இருக்கை: காரணம் என்ன தெரியுமா?

DIN

மாநிலங்களவையில் முதல் வரிசையில் உள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இருக்கை கடைசி வரிசைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


சக்கர நாற்காலியின் உதவியுடன் இயங்கும் மன்மோகன் சிங் அவர்களுக்கு வசதியாக இந்தப் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் இந்த புதிய முடிவின் மூலம் காங்கிரஸ் தலைவர்களான ப.சிதம்பரம் மற்றும் திக் விஜய் சிங் அவர்களது அமருமிடம் முன் வரிசைக்கு மாற்றப்பட உள்ளது. இந்த இருக்கை அமர்வு மாற்றங்கள் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் செயலுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறியதாவது: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் வசதிக்காக இந்தப் புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்வரிசையில் உள்ள அவரது இருக்கைக்குப் பதிலாக அவரது சக்கர நாற்காலியில் செல்வதற்கு வசதியாக கடைசி வரிசையில் இடம் மாற்றி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு 90 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

SCROLL FOR NEXT