இந்தியா

அதானி விவகாரம்: நாடாளுமன்ற குழு விசாரணைக்கு எதிர்க்கட்சிகள் கோரிக்கை!

DIN

அதானி குழும முறைகேடு குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மோசடி குற்றச்சாட்டு குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற அவைகள் முடங்கின.

இதுகுறித்து எதிர்க்கட்சிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:

கோடிக்கணக்கான இந்தியர்களின் பணத்திற்கு ஆபத்தை விளைவித்து, சந்தை மதிப்பை இழக்கும் நிறுவனங்களில் எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முதலீடு செய்வது குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இந்த பிரச்னை குறித்து விவாதிக்க நாங்கள் அளித்த ஒத்திவைப்பு நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. முக்கியமான பிரச்னைகளை எழுப்பும் போதெல்லாம் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படுவதில்லை. எல்ஐசி, எஸ்பிஐ வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் உள்ள ஏழை மக்களின் பணங்கள் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

இந்த விவாகாரம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எல்ஐசி, எஸ்பிஐ வங்கி மற்றும் தேசிய வங்கிகளில் முதலீடு செய்துள்ள மக்கள் தங்களின் பணங்களை இழக்கின்றனர். உண்மையை கண்டறிய நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

திருமகள்.. பூஜா ஹெக்டே!

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

SCROLL FOR NEXT